கோப்புப் படம் 
தமிழ்நாடு

பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல்: ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆளுநர் மாளிகை முன்பு இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர்.

DIN

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், ஆளுநர் மாளிகை முன்பு இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். காவலர்கள் அவர்களைத் தடுக்க முயன்றனர், அப்போது வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனிடையே இது தொடர்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியான வினோத் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் தப்பிச் சென்ற மர்ம நபரை விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.

பிடிபட்டவர் பிரபல ரெளடி வினோத் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறையில் இருந்தபோது வினோத்தை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி வழங்காமல் இருந்ததால், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT