முகப்பு
கோப்புப் படம்
தமிழ்நாடு

3 நாள்களுக்கு குடை கையில் இருக்கட்டும்: இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு

3 நாள்களுக்கு குடை கையில் இருக்கட்டும்: இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

தமிழகத்தில் அக்.28 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மேலும், தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை(அக்.30) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாளை மறுநாள்(அக்.31) கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்பட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 
 
முழு கட்டுரையைப் படிக்க →