கோப்புப்படம் 
தமிழ்நாடு

அடுத்த 4 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 4 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

தமிழகத்தில் அடுத்த 4 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக நேற்று மாலை முதல் மிதமானது முதல் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இந்நிலையில் அடுத்த 4 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மேலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கணித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT