தமிழ்நாடு

கனியாமூர் வழக்கு: நவ. 10-க்கு ஒத்திவைப்பு!

DIN


கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி வளாக சிசிடிவி பதிவு, ஜிப்மர் ஆய்வறிக்கை நகல் உள்ளிட்டவற்றைக்கோரிய மாணவியின் தாயார் மனு ஒத்திவைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி, ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். 

இது குறித்து, பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

குற்றப்பத்திரிகை நகலை வழங்கி, இந்த வழக்கில் ஆட்சேபனை இருந்தால் அது குறித்துத் தெரிவிக்கலாம் என மாணவியின் தாயாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகையில் விடுபட்ட ஆவணங்கள், சிசிடிவி பதிவு, புதுச்சேரி ஜிப்மர் குழு ஆய்வறிக்கை உள்ளிட்டவற்றின் நகல் கோரி மாணவியின் தாயார் விண்ணப்பித்திருந்தார். 

இந்த மனு மீதான விசாரணையின்போது சி.பி.சி.ஐ.டி., போலீசார் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. போதிய ஆவணங்கள் கோரி நவம்பர் 10ஆம் தேதிக்கு இந்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் திடீர் மழை!

கோவையில் விமான நிலையத்தில் ரூ.90.28 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

தங்கம் விலை குறைவு.. எவ்வளவு?

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் சேவை குறைப்பு

கே.எல். ராகுலை சாடிய லக்னெள உரிமையாளர்: நேரலையில் கண்ட ரசிகர்கள் ஆவேசம்!

SCROLL FOR NEXT