முகப்பு
தமிழ்நாடு

கடலூர் மாவட்டம் சாலைவிபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

கடலூர் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில் அருகே சாலை விபத்தில் இறந்த சக்திவேலின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:10 PM
கோப்புப்படம்
பகிர்:


கடலூர் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில் அருகே சாலை விபத்தில் இறந்த சக்திவேலின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், மோவூர் மேற்கு கிராமம், பிரதான சாலையில் சனிக்கிழமை (செப்.2) இரவு முட்டம் கிராமத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் நோக்கி சென்ற இருசக்கர வாகனமும், காட்டுமன்னார்கோயிலில் இருந்து சென்ற நான்கு சக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதி ஏற்பட்ட விபத்தில் கடலூர் மாவட்டம், முட்டம் கிராமத்தைச் சேர்ந்த ம.சக்திவேல்(25) சம்பவ இடத்திலேயே இறந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

இறந்த சக்திவேல் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் அஜித் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்திரவிட்டுள்ளேன் என்று அவா் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →