தமிழ்நாடு

பல்கலை. துணைவேந்தர் நியமனம்: ஆளுநருக்கு தமிழக அரசு பதில் கடிதம்

DIN

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்களுக்கு, நியமனம் தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பதில் கடிதம் எழுதியிருக்கிறது.

யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதும். புதிதாக உறுப்பினர்களை சேர்க்க அவசியம் இல்லை என்று, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழக அரசு எழுதியிருக்கும் பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமனமிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், துணைவேந்தர் தேடுதல் குழுவில்,, யுஜிசி குழு பிரதிநிதியை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற ஆளுநர் ஆர்.என். ரவியின் நிபந்தனையால் துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசுக்கு ஆளுநர் அனுப்பிய கடிதத்தை பரிசீலித்த அரசு, ஆளுநரின் கோரிக்கைய ஏற்க முடியாது  என்றும், யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதும். புதிதாக உறுப்பினர்களை சேர்க்க அவசியம் இல்லை என்றும் தமிழக அரசு பதில் கடிதம் எழுதியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT