முகப்பு
தமிழ்நாடு

தேனி அரசு மருத்துவமனையில் அமைச்சரின் திடீர் ஆய்வால் தெரிய வந்த உண்மை

அமைச்சா் மா.சுப்பிரமணியன் நடத்திய திடீர் ஆய்வின்போது, நோயாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஸ்கேன் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
பகிர்:


தேனி அரசு மருத்துவமனையில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நடத்திய திடீர் ஆய்வின்போது, நோயாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஸ்கேன் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு இலவசமாக ஸ்கேன் எடுப்பதைத் தவிர்த்துவிட்டு, தலா ஒரு நோயாளியிடமிருந்து ரூ.2,500 பெற்றுக் கொண்டு ஸ்கேன் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கும் மையத்துக்குச் சென்ற அமைச்சர், அங்கு ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போதுதான், 7 நோயாளிகளிடமிருந்து தலா ரூ.2500 பெற்றுக் கொண்டு ஸ்கேன் எடுத்தது தெரிய வந்தது.

உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன்  தனியார் ஸ்கேன் நிறுவனம், ஸ்கேன் எடுப்பதற்கான பணிக்காக செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் புதிய எம்ஆர்ஐ பரிசோதனை இயந்திரம் வாங்கி, இலவசமாக சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவர்களிடம் அமைச்சர் கூறியுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →