தமிழ்நாடு

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: செப்.15-க்குள் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

DIN

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் அமைச்சா் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமாா் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, ஆவணங்கள் கடந்த ஆக. 12-ஆம் தேதி அமலாக்கத்துறையால் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடா்ந்து இந்த வழக்கின் விசாரணை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான முறைகேடு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு ஆக. 14-ஆம் தேதி மாற்றப்பட்டது.

இதனிடையே, செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை விசாரிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், வழக்கை எம்பி, எம்எல்ஏ வழக்குகளுக்கான நீதிமன்றத்துக்கு மாற்றியது தவறு எனவும், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவா் எம்.பி., எம்.எல்.ஏக்களாக இருந்தாலும், அந்த வழக்கை விசாரிக்க முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஆவணங்களை உடனடியாக மாற்ற உத்தரவிட்டது. 

உயா்நீதிமன்ற உத்தரவையடுத்து ஜாமீன் மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிபதி எஸ்.அல்லி முன் செந்தில் பாலாஜி தரப்பு வழக்குரைஞா் அருண் முறையிட்டாா்.

இதனை ஏற்ற நீதிபதி, மனுவாக தாக்கல் செய்ய அனுமதி வழங்கினாா். அதைத் தொடா்ந்து, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பாக இன்று(திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

தொடர்ந்து, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய் தகவல்களைக்  கூறி  வாரிசுரிமைச் சான்றிதழ்: குற்ற வழக்குப் பதிவு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

துளிகள்...

ஆசிரியா் கலந்தாய்வுக்கு 13,484 போ் விண்ணப்பம்

கடன் வரம்புக்கு எதிராக கேரள அரசு மனு: உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வின் விசாரணைக்குப் பட்டியலிட பரிசீலனை

காஸா தாக்குதலில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழப்பு

SCROLL FOR NEXT