தமிழ்நாடு

கோவையில் தவறி விழுந்த பெண் பயணியை மீட்ட ரயில்வே காவலர்; பரபரப்பு விடியோ

DIN

கோவை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் பயணி தவறி விழுந்த நிலையில், துரிதமாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் பயணியை பத்திரமாக மீட்டார். 

கோவையில் ரயில் நிலையத்தில் இன்று மதியம் கோவையில் இருந்து சென்னை செல்லும் ரயில் புறப்பட்டது. அப்போது அவசர அவசரமாக வந்து ரயிலில் இரு பெண்கள் ஏற முயன்றனர். அதில் ஒரு பெண் ரயிலில் ஏறிய நிலையில், மற்றொரு பெண் ஏறும்போது ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்தார். ரயில் சென்று கொண்டு இருந்த நிலையில் தவறி விழுந்த பெண்ணை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் ராஜேஷ் கண்ணன், துரிதமாக செயல்பட்டு நடைமேடைக்கு இழுத்து விபத்திலிருந்து காப்பாற்றினார். 

இந்த காட்சிகள் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் ரயிலில் இரு பெண்கள் ஏற முயற்சிப்பதும் ஒரு பெண் ஏறிய நிலையில் மற்றொரு பெண் ஏறும்போது ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுவதும், அவரை தலைமைக் காவலர் காப்பாற்றுவதும் தெளிவாக பதிவாகியுள்ளது. 

இதனிடையே துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய தலைமை காவலருக்கு ரயில்வே பாதுகாப்பு படைப் பிரிவு காவலர்கள் மற்றும்  பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

SCROLL FOR NEXT