புரட்டாசி மாதம் நாளை பிறக்கவுள்ள நிலையில், கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று (செப். 17) மீன் சந்தைகளில் அதிகாலை முதலே அதிக அளவிலான மக்கள் குவிந்துள்ளனர்.
புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறையும் என்பதால், இன்று அசைவம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், மீன்களின் விலை சற்று உயர்ந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
சென்னை காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, வானகரம் மீன் சந்தையில் அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதேபோன்று கடலூர், நாகை மீன்பிடி துறைமுகத்திலும் அதிகாலை 3 மணிமுதலே அதிக அளவில் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
மழைக்காலங்களில் மீன்பிடிக்க கடலுக்கு மீனவர்கள் செல்வதும் குறையும். இதனால் புரட்டாசி மாதத்தில் மீன்களின் வரத்தும் வெகுவாகக் குறையும் என்பதால், பிடித்த மீன்களை விற்பனை செய்வதில் மீனவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.