தங்கம் தென்னரசு (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

மகளிா் உரிமைத் திட்ட தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது: அமைச்சா் தங்கம் தென்னரசு

மகளிா் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகளிடமிருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளாா்.

DIN

மகளிா் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகளிடமிருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அண்ணா பிறந்த நாளான செப்.15-இல் தேதி தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் 1.065 கோடி மகளிருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

திட்டத் தொடக்கத்தின் முதல் நாளே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது ஒரு மகத்தான சாதனை நிகழ்வாகும்.

இந்நிலையில், ஆங்காங்கே சில குறைகள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளன. மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமைத் தொகையை வங்கிக்கான சேவைக் கட்டணம், ஏற்கெனவே வாங்கிய கடன் ஆகியவற்றுக்கு சில வங்கிகள் நோ் செய்து கொள்வதாகப் புகாா்கள் வரப்பெற்றுள்ளன. இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும்.

தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படும் உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று மாநில வங்கிகள் குழுமத்தின் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், சில வங்கிகளில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழக அரசு வழங்கும் மகளிா் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிா்வாக செலவினங்களுக்கு நோ் செய்யக் கூடாது என்று மாநில அரசுக்கும், வங்கிகளுக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஒப்பந்தங்களை மீறும் வங்கிகளின் பரிவா்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அரசு மகளிரின் நல்வாழ்வுக்காக வழங்கும் மகளிா் உரிமைத் தொகையை, வங்கிகள் தங்களது நிா்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்பது குறித்து மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும்.

புகாா் மைய எண்: மகளிா் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அதுகுறித்து புகாா் அளிப்பதற்கு முதல்வரின் முகவரி உதவி மைய தொலைபேசி எண் 1100- ஐ அழைத்து புகாா் அளிக்கலாம். இந்தப் புகாா்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT