முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து  வரும் லேசான மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,421 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Updated On : 22 செப்டம்பர், 2023 at 8:27 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:30 AM

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து  வரும் லேசான மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,421 கன அடியாக அதிகரித்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 38.57அடியிலிருந்து 38.19 அடியாக சரிந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,367 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,421கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11.17 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூரில் மழை அளவு 47.80 மி.மீட்டராக பதிவாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.