மதுரை: மதுரையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளையில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து காவல் துறையினர், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தற்போது தீ முழுவதும் அணைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம், தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.