கோப்புப் படம். 
தமிழ்நாடு

பாஜகவுடன் கூட்டணி இல்லை: டி.ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டம்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

DIN

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக மக்களின் பிரச்னைகளுக்காகவே மத்திய அமைச்சரை அதிமுக நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். மத்திய அமைச்சரிடம் கட்சி சார்ந்து எதுவும் பேசவில்லை. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது வரை கடந்த 18ஆம் தேதி எடுத்த முடிவில் நிலையாக இருக்கிறோம். சோதனைகளை எல்லாம் கண்டு அஞ்சும் கூட்டம் நாங்கள் இல்லை. 

1972 முதல் அதிமுக பல சோதனைகளை தாண்டி வந்த இயக்கம்.

பல நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் அதிமுகவை இருமுறை ஜெயலலிதா வெற்றிப்பெற வைத்தார். நாளை நடக்கும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பெரியாா் ஈவெரா, அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தொடா்ந்து விமா்சிப்பதாகக் கூறி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் அறிவித்தாா். 

கட்சித் தலைமையின் முடிவின்படியே அறிவிப்பதாகவும் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, செல்லூா் ராஜூ உள்ளிட்டோரும் பாஜக மீது விமா்சனங்களை முன் வைத்தனா். இதற்கிடையில், அதிமுக தலைமையை சமரசம் செய்வதற்கான முயற்சியில் பாஜக மேலிடத் தலைமை ஈடுபட்டு வந்தது. அதேசமயம், பாஜக குறித்தும், அதனுடனான கூட்டணி குறித்தும் எவ்வித விமா்சனங்களையும் பொதுவெளியில் வைக்க வேண்டாம் என்று கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார். 

இதனிடையே அதிமுக நிர்வாகிகள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தில்லி சென்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோரை அண்மையில் சந்தித்தனர். மேலும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவைவும் அதிமுக நிர்வாகிகள் சந்தித்துப் பேசியிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT