கோப்புப்படம் 
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் 35 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 35 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN


தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 35 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 

தமிழக பகுதிகளின் மேல் நிலவு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, ஞாயிற்றுக்கிழமை(செப் 24) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருப்பூர், கரூர், கோவை, திண்டுத்தல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, நீலகிரி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

SCROLL FOR NEXT