அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர். 
தமிழ்நாடு

புதுக்கோட்டை மாணவர் தற்கொலை: தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டையில் பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக தலைமையாசிரியர் சிவப்பிரகாசம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

DIN

புதுக்கோட்டையில் பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக தலைமையாசிரியர் சிவப்பிரகாசம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை அருகே விஜயபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் மாதேஸ்வரன் (17). இவர், புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். 

திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவர் மாதேஸ்வரன் மாலையில் வீடு திரும்பவில்லை. இது குறித்து குடும்பத்தினர் மாதேஸ்வரனை தேடிய நிலையில், திங்கள்கிழமை இரவு பள்ளியின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. 

இதுகுறித்து தகவலறிந்து வந்த கணேஷ் நகர் காவல் நிலையத்தினர் சடலத்தைக் கைப்பற்றி, இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வந்தனர்.

இது குறித்த விசாரணையில், அதிக தலைமுடி, தாடியுடன் வந்த மாணவர் மாதேஸ்வரனை ஆசிரியர்கள் திட்டயதாக உறவினர்கள் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், தலைமையாசிரியர் சிவப்பிரகாசம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்பாராமல் வரும் பணம்! மோசடியாளர்கள் வலையில் சிக்க வேண்டாம்! | Cyber Security | Cyber Shield

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

இலங்கையில் நாயகி ஊர்வலம்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

SCROLL FOR NEXT