தமிழ்நாடு

ஜெயிலருக்கு அனுமதித்த அரசு லியோவுக்கு மறுப்பது ஏன்? சீமான்

DIN

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்துக்கு அனுமதித்த அரசு விஜய்யின் லியோ திரைப்பட விழாவுக்கு அனுமதி கொடுக்காதது ஏன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் பல படங்களில் இசைவெளியீட்டு விழாவை நடத்தியுள்ளார். இந்தமுறை ரத்து செய்தது ஏன்?

ஏ.ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சியில் நடைபெற்ற பிரச்னையை அரசு காரணம் காட்டுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது காவல் துறை. அங்கு கள ஆய்வு செய்து அனுமதித்தது போல, நேரு உள்விளையாட்டு அரங்கிலும் ரசிகர்கள் வருகை குறித்து ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும்.

ஏ.ஆர். ரஹ்மான் நிகழச்சிக்கு அனுமதி கொடுத்த அரசு, விஜய் இசைவெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுப்பது ஏன்?

மக்கள் அதிகம் கூடுவார்கள் என்ற அச்சத்தில் அனுமதி கொடுக்கவில்லை என்றால், காவல் துறை எதற்கு உள்ளது என்று கேள்வி எழுப்பினார். 

அரசியல் கட்சியினர் மாநாடு நடத்தும்போது லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். அப்போது பாதுகாப்பு அளிப்பது காவல் துறைதான். இப்போது அப்படி செய்வதற்கு முன்வராதது ஏன்?.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் அனுமதி கொடுக்கப்பட்டது. விஜய்க்கு ஏன் கொடுக்கவில்லை. பந்தை எவ்வளவு பொத்திவைத்தாலும் அது மேலே வரத்தான் செய்யும் என விஜய்க்கு ஆதரவாகப் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

இன்று அமோகமான நாள்!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT