சென்னை: திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வரும், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட “தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்" 1.10.2023 (ஞாயிற்றுக்கிழமை), காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
இந்த கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.