முகப்பு
தமிழ்நாடு

விஜயகாந்த் இறுதிச்சடங்கில் அரசு சார்பில் 2 அமைச்சர்கள் பங்கேற்பு!

விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கில் தமிழக அரசு சார்பில் 2 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கில் தமிழக அரசு சார்பில் 2 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 

உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் இன்று சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. இவரின் உடலுக்கு முக்கியத் தலைவர்கள், தொண்டர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

விஜயகாந்த்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு மேல் நல்லடக்கம் செய்ய உள்ளது. 

இன்னும் சற்று நேரத்தில் விஜயகாந்த்தின் இறுதிச் சடங்கு துவங்க உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். 

அதன்படி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் அரசு சார்பில் இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.