முகப்பு
தமிழ்நாடு

தேமுதிக அலுவலகம் முன் குவியும் மக்கள்!

விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கைக் காண தேமுதிக தலைமை அலுவலகம் முன் மக்கள் திரண்டுள்ளனர்.

Updated On : 29 டிசம்பர், 2023 at 2:41 PM
பகிர்:

விஜயகாந்த்தின் மறைவையொட்டி சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல தரப்பிலிருந்தும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்பட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தியதுடன் தங்கள் இரங்கல்களையும் பதிவு செய்தனர். மேலும், பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக முகப்பில் விஜயகாந்த்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதால் அவருக்கான இறுதிச்சடங்கைக் காண அலுவலகம் முன் ஆயிரக்கணக்கனோர் குவித்துள்ளனர்.

Advertisement

பெரும்பாலும் தேமுதிக தொண்டர்கள் என்பதால் காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதமும் நடைபெற்று வருவதாகத் தகவல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.