முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் பட்டாசு கடையில் தீ விபத்து: 4 பேர் பலி

கிருஷ்ணகிரியில் தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோயில் செல்லும் சாலையில் உள்ள தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்தனர். பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன. 

பட்டாசு வெடி விபத்தில் பலத்த காயமடைந்த அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ள கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயணைக்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →