முகப்பு
தமிழ்நாடு

4 காவல் அதிகாரிகள் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு

கூடுதல் எஸ்.பி.க்கள் நான்கு பேரை எஸ்.பி.க்களாக பதவி உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  

Updated On : 30 ஜூலை, 2023 at 11:12 AM
கோப்புப் படம்
பகிர்:

கூடுதல் எஸ்.பி.க்கள் நான்கு பேரை எஸ்.பி.க்களாக பதவி உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி திருச்சி சிறப்பு போலீஸ் படை ஏ.எஸ்.பி. ரவிச்சந்திரன் திருச்சி நகர காவல் துணை ஆணையராகவும், விழுப்புரம் காவலர் தேர்வு பள்ளி ஏ.எஸ்.பி. ரமேஷ்பாபு சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிக்க- ரூ. 200-ஐ நெருங்கும் தக்காளி விலை

Advertisement

இதேபோல் அரியலூர் ஏ.எஸ்.பி. மலைச்சாமி சென்னை அறிவுசார் சொத்து பிரிவின் அமலாக்கத்துறை எஸ்.பி.யாகவும், சேலம் சைபர் குற்றப்பிரிவு ஏ.எஸ்.பி.செல்லபாண்டியன் ஆவடி சிறப்பு போலீஸ் பட்டாலியன் கமாண்டன்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.