முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் முழு நேரமும் அன்னதானம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன திருவிழாவை முன்னிட்டு அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அறக்கட்டளை சார்பில் 3 நாட்கள் பகல் முழுநேரமும் அன்னதானம் நடைபெறுகிறது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
நடராஜர் கோயில் தெற்கு சன்னதி கோபுர வாயில் அருகே உள்ள அன்னதான கூடத்தில் இட்லி, சாம்பார் வழங்கப்பட்டது.
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன திருவிழாவை முன்னிட்டு அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அறக்கட்டளை சார்பில் ஜூன் 24, 25, 26 ஆகிய 3 நாட்களும் பகல் முழுநேரமும் அன்னதானம் நடைபெறுகிறது. 

சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு சன்னதியில் உள்ள நித்தியம் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் டிரஸ்ட் சார்பில் நடைபெறும் அன்னதான கூடத்தில் சனிக்கிழமை காலை பக்தர்கள் அனைவருக்கும் சுடச்சுட இட்லி, சாம்பார், பொங்கல் வழங்கப்பட்டு முழு நேர அன்னதானம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அறக்கட்டளை டிரஸ்டி ராஜா தீட்சிதர் செய்து இருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.