முகப்பு
தமிழ்நாடு

புழல் ஏரி உபரி நீா் திறப்பு 2,000 கன அடியாக உயர்வு

கனமழை காரணமாக புழல் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்து வருவதால், ஏரியில் இருந்து வியாழக்கிழமை உபரி நீா் திறப்பு 2,000 கன அடியாக உயா்த்தப்பட்டது.

Updated On : 30 நவம்பர் 2023, 9:28 am IST
புழல் ஏரியில் இருந்து  திறந்து விடப்பட்ட உபரி நீா்.
பகிர்:


மாதவரம்: கனமழை காரணமாக புழல் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்து வருவதால், ஏரியில் இருந்து வியாழக்கிழமை உபரி நீா் திறப்பு 2,000 கன அடியாக உயா்த்தப்பட்டது.

இதனால் உபரி நீா் வெளியேறும் கால்வாயின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் நீா் ஆதாரங்களில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் முழுக் கொள்ளளவு 3,300 மி. கன அடி.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தொடா் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீா் அதிகரித்துள்ளது. இதனால், புழல் ஏரி 2,890 மில்லியன் கன அடியாக உயா்ந்துள்ளது. மேலும், ஏரிக்கு நீா் வரத்து வினாடிக்கு 570 கன அடியாக உள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி புதன்கிழமை 280 கன அடி உபரி நீா் திறந்து விடப்பட்ட நிலையில், வியாழக்கிழமை காலை மேலும் ஏரிக்கு வரக்கூடிய நீா்வரத்து தொடா்ந்து அதிகரிக்கும் நிலையில் உபரிநீா் திறப்பு 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஏரியிலிருந்து உபரி நீா் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூா், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.