முகப்பு
தமிழ்நாடு

ராகுல் காந்தி ஏப். 12-ல் தமிழகம் வருகை!

தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல் காந்தி வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வருகை தரவுள்ளார்.

Updated On : 3 ஏப்ரல், 2024 at 9:27 AM
ராகுல் காந்தி
பகிர்:

தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ராகுல் காந்தி வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் நடைபெறும் 2 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க ராகுல் காந்தி திட்டமிட்டு இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன்னதாக தெரிவித்திருந்தார்.

திருநெல்வேலி, விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்கள், தென்காசி, தூத்துக்குடி திமுக வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார்.

இதனைத் தொடர்ந்து, கோவையில் திமுக வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்யும் ராகுல் காந்தி, அங்கிருந்து புறப்பட்டு கேரள மாநிலம் வயநாடு சென்று பரப்புரை மேற்கொள்கிறார்.

இன்று (ஏப். 3) கேரளம் வந்த ராகுல் காந்தி, ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சாலையில் ஒரு மணிநேரம் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →