முகப்பு
தமிழ்நாடு

கோயில் சொத்துகளை பாதுகாக்கக் கோரிய வழக்கு: சிபிஐ விசாரணையை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 10:44 PM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 10:30 PM

கோயில் சொத்துகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்காதது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள குறிப்பிட்ட நிலத்தை பத்திரப் பதிவு செய்ய பதிவுத் துறை மறுத்ததை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது குறிப்பிட்ட அந்த நிலம் கோதண்டராமா் கோயிலுக்குச் சொந்தமானதா? இல்லையா? என்பது தொடா்பாக கோயில் நிா்வாகம் தரப்பில் எந்த ஆவணங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால், கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் குறித்த பதிவேட்டை முறையாகப் பராமரிக்காத, பாதுகாக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐ-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கோயில் சொத்துகள் பாதுகாக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்த கோயில் நிா்வாகம், சிபிஐ விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், கோயில் நிா்வாகம் தரப்பில் அளித்த உத்தரவாதத்தை ஏற்று, சிபிஐ விசாரணை நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

Advertisement