தமிழ்நாடு

ஜெ.பி. நட்டா வாகனப் பேரணி தொடக்கம்!

இரவு 8 மணிக்குள் வாகனப் பேரணியை நடத்தி முடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Manivannan.S

பாஜக தேசிய செயலாளர் ஜெ.பி. நட்டாவின் வாகனப் பேரணி திருச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருச்சி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து வாகனப் பேரணி நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்துக்கு வந்துள்ள ஜெ.பி. நட்டா, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

காலையில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பி.கார்த்தியாயினியை ஆதரித்து அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, திருச்சியில் அமமுக வேட்பாளரை ஆதரித்து வாகனப் பேரணி நடத்துகிறார். வாகனப் பேரணி செல்லும் ஜெ.பி. நட்டாவுக்கு இரு வழியிலும் தொண்டர்கள் நின்று உற்சாக வரவேற்பளித்தனர்

இரவு 8 மணிக்குள் வாகனப் பேரணியை நடத்தி முடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கண்ணப்பா உணவகத்திலிருந்து உறையூர் நாச்சியார் கோவில் வரை வாகனப் பேரணி நடைபெறவுள்ளது.

ஜெ.பி. நட்டாவின் வாகனப் பேரணியையொட்டி அப்பகுதிகளில் 300-க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

SCROLL FOR NEXT