முகப்பு
தமிழ்நாடு

இபிஎஸ் ரோடு ஷோவுக்கு எத்தனை பேர் வருவார்கள்? - அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோவுக்கு எத்தனை பேர் வருவார்கள் என்று அண்ணாமலை பேசினார்.

Updated On : 11 ஏப்ரல், 2024 at 8:31 AM
அண்ணாமலை (கோப்புப்படம்)
பகிர்:

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

எடப்பாடு பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்?; யாரும் வரமாட்டார்கள் என அவர்களுக்கெ தெரியும். பணத்தைக் கொடுத்து கூட்டத்தை சேர்ப்பவர்கள் ரோடு ஷோ சென்றால் கூட்டம் வராது.

இபிஎஸ் பழைய கதைகளையே பேசி வருகிறார். மக்களை சந்திப்பதற்காகவே பாஜக தலைவர்கள் தமிழகம் வருகின்றனர்.

ஜூன் 4 ஆம் தேதி பண அரசியல் என்ற பேய் கோவையிலிருந்து ஓட்டப்படும்.

ஊழல் பல்கலைக்கழகத்திற்கு பெயரை ஸ்டாலின் என்று வைத்தால் அதற்கு வேந்தராக பிரதமர் மோடி இருப்பார். பல்கலைக்கழகத்தில் நடக்கும் பிரச்னைகளை வேந்தர்கள் வெளிக்கொண்டு வருவார்கள் எனப் பேசினார்.

முழு கட்டுரையைப் படிக்க →