மயங்கி விழுந்த மாணவனை காப்பாற்ற ஓடும் சக மாணவர்கள். 
தமிழ்நாடு

கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி: சந்தேகத்தின் பேரில் தந்தை புகார்!

இலுப்பூர் கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

விராலிமலை: இலுப்பூர் அருகே இயங்கி வரும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பயிற்று வந்த மாணவன் நடனம் பயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சூரியூர் நெடும்புலியைச் சேர்ந்தவர் கணேசன்(55), இவரது மகன் பாலாஜி (19).

இவர் இலுப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வி மற்றும் அறிவியல் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிப்பை கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்த நிலையில், கல்லூரியில் நடைபெற உள்ள ஆண்டு விழாவிற்காக கடந்த 10ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடனம் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்.

நடனமாடி கொண்டிருந்த பாலாஜி திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அருகில் இருந்த மாணவர்கள், அவரை மீட்டு இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலாஜி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இதைத்தொடர்ந்து மகன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை கணேசன் இலுப்பூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய கோரிக்கை

திமுகவுடன் கூட்டணி என்பது வதந்தி ஓ.பன்னீா்செல்வம்

ரயிலில் மடிக்கணினி திருடியவா் கைது

கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியா் இடமாற்றம்

சாலைப் பணி ஒப்பந்த நிறுவனத்தில் ரூ.78 லட்சம் கையாடல்

SCROLL FOR NEXT