முகப்பு
தமிழ்நாடு

சித்திரைத் திருவிழா: தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு வருகிற 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 ஏப்ரல் 2024, 2:39 pm IST
தஞ்சை பெரிய கோயில்
பகிர்:

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் கட்டிடக்கலைக்கும் - சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் 18 நாள்கள் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

அந்தவகையில், கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றுத்துடன் திருவிழா தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற ஏப். 20-ஆம் தேதி நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

இதனை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும் ஏப். 20 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments