கோப்புப் படம்.
கோப்புப் படம். 
தமிழ்நாடு

பாஜக தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை: ராகுல் காந்தி

DIN

பாஜக தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு என எந்த திட்டமும் இல்லை இன்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நீலகிரி தொகுதிக்குட்பட்ட கூடலூரில் தேயிலை தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தமிழ்நாட்டுக்கு வருவது தமிழக மக்களை சந்திப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை.

ஜனநாயகத்தை காக்க மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். ஒரே நாடு, ஒரு தலைவர் என தவறாக வழிநடத்தப் பார்க்கிறார் பிரதமர் மோடி. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு என எந்த திட்டமும் இல்லை. இந்தியாவில் பல மொழிகள் உள்ளன.

இந்தியாவின் இயல்பை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை. பன்முகத்தன்மை, சமூகநீதியை அழித்து, ஆர்எஸ்எஸ் கொள்கைகளை புகுத்த நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். வயநாடு செல்லும் வழியில் நீலகிரியில் கல்லூரி மாணவர்களையும் தொழிலாளர்களையும் அவர் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தாளூரில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் பறக்கும்படையினர் சோதனை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எத்தகைய சவால்களையும் எதிா்கொள்ளும் பெல் நிறுவனம் -பொறியியல் பிரிவு இயக்குநா் பெருமிதம்

86ஆம் ஆண்டில் திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் -தேடிவந்து ஆட்சியா் வாழ்த்து

விசாலீஸ்வரா் கோயிலில் பாண அரசரின் கல்வெட்டு!

மாநகராட்சி குறித்து பொய் தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை -ஆணையா் எச்சரிக்கை

திருச்சியில் இரவு, பகலாக கனமழை: 306 மி.மீ. பதிவு

SCROLL FOR NEXT