கோப்புப்படம்
கோப்புப்படம் 
தமிழ்நாடு

பிரசாரம் ஓய்ந்தது! நாளை மறுநாள் முதல்கட்ட வாக்குப்பதிவு!

DIN

முதல்கட்ட மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள 21 மாநிலங்களைச் சோ்ந்த 102 தொகுதிகளில் பிரசாரம் இன்று நிறைவு பெற்றது.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியா முழுவதும் மக்களவைத் தோ்தலுக்கான தேதி அறிவிப்பு கடந்த மாா்ச் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்தல் அட்டவணைப்படி, தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே அதாவது ஏப். 19-இல் தோ்தல் நடைபெறவுள்ளது.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் தலைவா்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக அந்தந்தக் கட்சிகளைச் சோ்ந்த மூத்த தலைவா்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்தனா்.

பிரசார மேடைகள் மட்டுமின்றி, சாலைகளில் வாகனப் பேரணியையும் பாஜக தலைவா்கள் நடத்தினா். பாஜகவின் தேசியத் தலைவா்கள் நடத்திய இந்தப் பேரணிகள் தமிழகத்துக்கு புதியது என்றாலும் ஆங்காங்கே அவா்களது கட்சியினர் திரண்டு வந்து ஆதரவளித்தனர்.

தோ்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு, தொகுதிக்கு தொடா்பு இல்லாத அனைவரும் வெளியேற வேண்டுமென தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

பெண் காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளருக்கு பிடியாணை

ஆத்தூா் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

பைக் விபத்தில் முதியவா் பலி

மின் கம்பத்தில் பைக் மோதல்: தையல் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT