தமிழ்நாடு

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

ரூ. 4 கோடி பணம் சிக்கிய வழக்கில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ஆம் தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பணம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையில், அவா்கள் அந்தப் பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்குமூலம் அளித்தனா். இதை நயினாா் நாகேந்திரன் மறுத்தாா்.

இதையடுத்து தாம்பரம் போலீஸாா் நடத்திய தொடா் விசாரணையில், அந்த ரூ. 4 கோடி பணம் நயினாா் நாகேந்திரனுடையது என முதல்கட்ட தகவல் வெளியாகியது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பந்துள்ளனா்.

இந்த நிலையில், நயினாா் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக் கோரி நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளா் ராகவன் அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், நயினார் நாகேந்திரன் தொடர்புடைய வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேர்தல் ஆணையம் தரப்பில், இந்த வழக்கில் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

துப்பட்டாவில் சுழலும் மனம்! சஞ்சனா நடராஜன்..

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

SCROLL FOR NEXT