தமிழ்நாடு

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

DIN

கரூர்: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலக தயார் என்றார் பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை.

இன்று (ஏப். 19) காலை தனது சொந்த ஊரான சூடாமணி பஞ்சாயத்துக்கு உள்பட்ட ஊத்துப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்திய பின் அவர் செய்தியாளரிடம் கூறியது:

கரூர் மக்களவைத் தொகுதி க.பரமத்தி ஒன்றியம் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது பெற்றோருடன் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

பிறகு அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது,

மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வேண்டும்.

எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்து உள்ளேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் நீங்கள் எங்கு இருந்தாலும் இன்று மாலைக்குள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களியுங்கள்.

அப்போது தான் நாட்டில் நல்ல ஆட்சி உருவாகும்.

தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் ஒரு வாக்காளர்களுக்கு பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்.

பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இத்தேர்தல் இருக்கும்.

முழுமையாக இந்த தேர்தல் நேர்மையான அறம் சார்ந்த வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தேர்தலில் பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, நல்ல பாடம் என்றால் முதல்வர் சொன்னபடி பாஜக 39 இடங்களில் வெற்றி பெறும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT