கோப்புப்படம் 
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்ததுள்ளது.

DIN

தங்கத்தின் விலை கடந்தாண்டு மார்ச் மாத தொடக்கத்திலிருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இதையடுத்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தைக் கடந்தது.

திங்கள்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ. 6,845-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 54,760-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ. 89-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 குறைந்து ரூ.89,000-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல். 23) சவரனுக்கு ரூ. 1,160 குறைந்து ரூ. 53,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.145 குறைந்து ரூ.6,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ. 2.50 குறைந்து ஒரு கிராம் ரூ.86.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 86,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT