பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர் பள்ளத்தில் சிக்கியது.
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 7.05 மணிக்கு வடம் பிடித்து தொடங்கப்பட்டது.
இத்தேர் முற்பகல் 10.30 - 10.45 மணியளவில் சாரங்கபாணி தெற்கு வீதிக்கு வந்தபோது திடீரென இடது புற சக்கரம் ஏறக்குறைய 5 அடி ஆழத்துக்கு திடீரென உள்வாங்கியது.
இதைத்தொடர்ந்து பள்ளத்தில் மணல், ஜல்லிக் கற்கள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு தேர் சக்கரத்தை மீட்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
அப்பள்ளத்தில், குடிநீர் உந்து சக்தி நிலையத்துக்கான குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அண்மையில் பள்ளம் தோண்டப்பட்டு சீர் செய்யப்பட்டது. அதன் பிறகு பள்ளம் சரியாக மூடப்படாத நிலையில், அதன் மீது வந்த தேர் உள்வாங்கியதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் தேரோட்டம் சுமார் 2 மணிநேரம் தடைப்பட்டுள்ளது.
படவிளக்கம்: கும்பகோணம் சாரங்கபாணி தெற்கு வீதியில் பள்ளத்தில் சிக்கிய தேர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.