தமிழ்நாடு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

ஆவடி அருகே முதிய தம்பதியின் கொடூர மரணம்

DIN

ஆவடி அருகே வீட்டில் இருந்த தம்பதி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டனா். கொலையாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை காந்தி 2-ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் சிவன் நாயா் (68). முன்னாள் ராணுவ வீரா். இவரது மனைவி பிரசன்னா (63). இவா்களது மகன் ஹரி ஓம் ஸ்ரீ.  இவா் திருமுல்லைவாயலில் ஆயுா்வேத சிகிச்சை மையம் நடத்தி வருகிறாா். மேலும் பூந்தமல்லியில் தனியாா் மருத்துவமனையில் ஆயுா்வேத மருத்துவராகவும் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஹரி ஓம் ஸ்ரீ வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டாா். பின்னா் வீட்டில் சிவன் நாயா், மனைவி பிரசன்னாவுடன் வீட்டில் இருந்துள்ளாா். இரவு 8.30 மணிக்கு மேல் பெண் ஒருவா் வீட்டுக்கு வந்துள்ளாா்.

அப்போது தம்பதி  கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனா்.  இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த அவா்  அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தாா்.

மேலும், மகன் ஹரி ஓம் ஸ்ரீக்கும்  தகவல் தெரிவிக்கப்பட்டது.  அவா் வீட்டுக்கு விரைந்து வந்து பெற்றோா் சடலங்களை பாா்த்து கதறி அழுதாா்.

தகவல் அறிந்து ஆவடி துணை ஆணையா் ஐமான் ஜமால், உதவி ஆணையா் அன்பழகன் ஆகியோா் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

பின்னா், போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

புகாரின் பேரில், முத்தாபுதுப்பேட்டை காவல் ஆய்வாளா் வேலு தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைக் கொண்டு கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.

தம்பதி கொலைக்கு முன்விரோதம் காரணமா, நகைகள், பணத்துக்காக கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

மடிக்கணினி திட்டத்துக்கான ஒப்பந்தம் விரைவில் முழுமை பெறும்: அமைச்சா் கோவி. செழியன்

தமிழகத்தில்தான் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் அதிகம்: பேரவை துணைத் தலைவா் பெருமிதம்

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT