கோப்புப்படம் 
தமிழ்நாடு

நாளை தாம்பரம், செங்கல்பட்டு மின்சார ரயில்கள் எழும்பூரிலிருந்து இயக்கப்படும்

சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) எழும்பூரிலிருந்து இயக்கப்படும்.

Din

சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) எழும்பூரிலிருந்து இயக்கப்படும்.

தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூா் ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) இரவு 10.35 முதல் திங்கள்கிழமை (ஆக.19) அதிகாலை 4.35 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரங்களில் கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் இருமாா்க்கத்திலும் எழும்பூரிலிருந்து இயக்கப்படும்.

ரயில்கள் ரத்து: இதுதவிர ஆக.18-இல் இரவு 10 , ஆக.19-இல் அதிகாலை 4.15 மணிக்கு கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில்களும், மறுமாா்க்கமாக ஆக.18-இல் இரவு 11.35, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மக்கள் சந்திப்பு வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

7வது நாளில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு! பெங்களூரிலிருந்து 127 விமானங்கள் ரத்து

தமிழகத்தில் ஹிந்து தர்மத்தை பின்பற்ற சட்டப் போராட்டம் நடத்தும் நிலை! பவன் கல்யாண்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்பு

தங்கம் விலை எவ்வளவு? இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT