தமிழ்நாடு

உத்தமபாளையம்: சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி!

இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த நண்பர்கள் பலி

DIN

உத்தமபாளையம் புறவழிச்சாலையில் இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி இருவர் பலியாகினர்.

தேனி மாவட்டத்தின் சின்னமனூரில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் தீனா. இவர் முதுகலை பட்டதாரியாகவும், அவரது நண்பர் திவாகரன் இளங்கலை இரண்டாம் ஆண்டும் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் சேர்ந்து, சின்னமனூரில் இருந்து கம்பம் நோக்கி உத்தமபாளையம் அடுத்துள்ள அனுமந்தன்பட்டி புறவழி சாலையில் சென்றுள்ளார்.

இந்த நிலையில்,இவர்கள் சென்ற பைக்கும், ஆற்றுப்பாலத்தில் கீழிருந்து மேல் நோக்கி வந்த அகமது மீரான் என்பவர் பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதனையடுத்து, தீனா, திவாகர் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

அகமது மீரான் லேசான காயத்துடன் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனைத் தொடர்ந்து, படுகாயம் அடைந்த தீனா, திவாகரன் இருவரும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்து விட்டனர். கல்லூரி மாணவர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணங்கள் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT