கன்னியாகுமரியில் தேடப்பட்டு வந்த ரௌடி செல்வத்தை இன்ஸ்பெக்டர் ஆதாம் அலியின் தலைமையிலான குழு சுட்டுப் பிடித்தனர்.
தூத்துக்குடி செல்வம் என்ற தேடப்பட்டு வந்த ரௌடி, கன்னியாகுமரியின் அஞ்சுகிராமம் பகுதியில் ஆக. 18, ஞாயிற்றுக்கிழமை, ஒருவரைத் தாக்கிவிட்டு, அவரிடமிருந்து ரூ. 3000 ஐ கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து, ரௌடி செல்வத்தின் மீது சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்மீது மாநிலம் முழுவதும் 28 வழக்குகள் உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தேரூருக்கு அருகில் ரௌடி செல்வம் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் ஆதாம் அலி தலைமையிலான குழு, இன்று (ஆக. 19) ரௌடியைப் பிடிக்கச் சென்றனர்.
இந்த தேடுதல் வேட்டையின்போது, உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜின் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பயோட முயன்றுள்ளார், ரௌடி செல்வம். இதனைத் தொடர்ந்து, செல்வத்தின் முழங்காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார்,
காவல் ஆய்வாளர் ஆதாம் அலி. மேலும், உதவி ஆய்வாளரும் ரௌடியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரௌடி செல்வத்திடம் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.