முதல்வரின் இணைச் செயலராக லட்சுமிபதி நியமனம்! தூத்துக்குடி ஆட்சியர் மாற்றம்!
முதல்வரின் இணைச் செயலர் மற்றும் புதிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நியமனம் பற்றி...
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதியை, தமிழக முதல்வரின் இணைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்துக்குப் புதிய ஆட்சியராக பொது நூலகத் துறையின் இயக்குநரான இளம்பகவத்தை நியமித்தும் அவர் ஆணை பிறப்பித்துள்ளார்.
முதல்வரின் முதன்மை தனிச் செயலாளராக இருந்த நா. முருகானந்தம், தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக திங்கள்கிழமை காலை நியமிக்கப்பட்டார்.
புதிய தலைமைச் செயலராகப் பொறுப்பேற்ற சில மணி நேரங்களில், இரு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவை வெளியிட்டுள்ளார்.