எடப்பாடி பழனிசாமி. 
தமிழ்நாடு

திமுகவை போல் பாஜகவும் இரட்டை வேடம் போடுகிறது: எடப்பாடி பழனிசாமி

திமுகவை போல் பாஜகவும் இரட்டை வேடம் போடுகிறது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

DIN

திமுகவை போல் பாஜகவும் இரட்டை வேடம் போடுகிறது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் சேலம் புறநகர் மற்றும் புறநகர் மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கட்சி அமைப்புச் செயலாளர் செம்மலை, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன், மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெங்கடாஜலம், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மணி, பாலசுப்ரமணியன், ஜெய்சங்கரன், நல்லதம்பி, சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவிற்கு எனக்கும் அழைப்பு வந்தது. அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம் தான் இருந்தது. மாநில அரசின் செயலாளர் பெயர் தான் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு நடத்தியதாக, முதலமைச்சர் கூறுகிறார்.

திமுக அரசை குற்றம்சாட்டினால், பாஜக மாநில தலைவர் என்னை குறைசொல்கிறார். மத்திய தலைவர்கள் வெளியிட்டால் தான் எம்.ஜி.ஆருக்கு புகழ் என பாஜக கூறிக்கொண்டிருக்கிறது. திமுகவை போல பாஜகவும் இரட்டை வேடம் போடுகிறது. 10 ஆண்டுகளில் பாஜக ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை, கடன் சுமை தான் அதிகரித்துள்ளது.

மத்தியில் ரூ.55 லட்சம் கோடியாக இருந்த கடன், 10 ஆண்டுகளில் 165 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. எம்ஜிஆரின் வரலாறு தெரியாமல் அவரை சிறுமைப்படுத்தி அண்ணாமலை பேசுகிறார். அண்ணாமலை மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திற்கு என எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. பொய்களை மட்டுமே பேசுபவர் தான், தமிழக பாஜக தலைவராக உள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெரு நாய் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு நாடகம்! மேடையில் நடிகரை கடித்த தெருநாய்! | Kerala

இபிஎஸ்ஸுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை!

ராமதாஸ் இன்று வீடு திரும்புகிறார்: கமல்ஹாசன் தகவல்!

எச்சரிக்கை! இளம்பெண்களை அச்சுறுத்தும் சைபர் புல்லிங் தாக்குதல்!

கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்! மரத்தைப் பிடித்து தப்பித்தவர்! | Philippines

SCROLL FOR NEXT