முகப்பு
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் குறைவு!

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிகிறது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் குறைவு!

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிகிறது.

Updated On : 26 ஆகஸ்ட், 2024 at 3:56 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிகிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துள்ளது.

மழை இல்லாத காரணத்தால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட உபரி நீரின் அளவும் வெகுவாக குறைக்கப்பட்டது.

கர்நாடக அணைகளில் உபரி நீர் குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 6,598 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 4,284 கனஅடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 118.39 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 117.90 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 90.15 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →