மதுரையில் செப்.6 முதல் செப். 16 ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மதுரையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் காட்சி வருகிற செப். 6 ஆம் தேதி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
செப். 6 தொடங்கி செப். 16 ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெற உள்ளது. மதுரையில் தமுக்கம் மைதானத்தில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுவதாகதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.