முதல்வர் ரங்கசாமி 
தமிழ்நாடு

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 5,000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.

DIN

புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தபோது புதுச்சேரியில் கனமழை பெய்தது. அங்கு பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு நிவாரணங்களை முதல்வர் ரங்கசாமி இன்று அறிவித்தார்.

அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 5,000 வழங்கப்படும்.

புதுச்சேரியில் கனமழைக்கு 4 பேர் உயிரிழந்தயடுத்து நால்வரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

மேலும் கனமழையால் உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ. 40,000, ஆட்டிற்கு ரூ. 20,000,

சேதமடைந்த படகு ஒன்றுக்கு ரூ. 10,000, முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 20,000, விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

SCROLL FOR NEXT