முகப்பு
தமிழ்நாடு

மக்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆளுமை ஜெயலலிதா! இபிஎஸ் புகழஞ்சலி

ஜெயலலிதா நினைவு நாளில் இபிஎஸ் புகழஞ்சலி செலுத்தியது பற்றி...

Updated On : 5 டிசம்பர், 2024 at 4:34 AM
எடப்பாடி கே. பழனிசாமி
பகிர்:

தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை ஜெயலலிதா என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று எக்ஸ் தளத்தில் புகழஞ்சலி செலுத்தி எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவில், “மக்களால் மக்களுக்காவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை.

இந்த இயக்கத்தை, பல்வேறு சோதனைகளையும் கடந்து மக்களுக்காண பாதையில் தொடர்ந்து பயணிக்க உயிராய், உணர்வாய், உந்துசக்தியாய்த் திகழும் ஜெயலலிதா அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

ஜெயலலிதா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம். தீயசக்திகளின் ஆட்சியை விரட்டி, ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைத்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய "அமைதி, வளம், வளர்ச்சி" பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.