முகப்பு
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,098 கன அடியாகக் குறைந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,098 கன அடியாகக் குறைந்தது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 6:53 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,098 கன அடியாகக் குறைந்தது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை தணிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்தது. இன்று(வியாழக்கிழமை) காலை நீர்வரத்து வினாடிக்கு 32,240 கன அடியிலிருந்து வினாடிக்கு 25,098 கன அடியாகச் சரிந்துள்ளது.

அதேநேரத்தில் நேற்று காலை 113.21 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114.58 அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணை நீர் இருப்பு 85.09 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →