தேர்தல்களில் அதிமுக தோல்வி ஏன் என்பது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் நினைவு நாள் இன்று(டிச. 5) அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, கட்சி நிர்வாகிகள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோருடன் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து பேரணியாக வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்தார்.
இதையும் படிக்க | 'மோடியும் அதானியும் ஒன்றுதான்' - ராகுல் காந்தி!
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
'இதற்கு முன்பு இரட்டை இலை தொடர்பான பல வழக்குகளில் தற்காலிகமாகதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிவில் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பு இறுதியாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இறுதியாக இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும்.
அதிமுகவுக்கு வந்த சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றியவர் ஜெயலலிதா. மக்களவையில் 3-வது பெரிய கட்சியாக அதிமுகவை உயர்த்தியவர் அவர். அவரின் தியாகத்துக்கு உச்சபட்ச பதவி வழங்கப்பட்டது. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்துள்ளனர்.
இதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால்தான் அவர்கள்(இபிஎஸ் அணி) சந்தித்த தேர்தலில் எல்லாம் தோல்வியைச் சந்தித்துள்ளனர்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.