சென்னையில் வந்து குவியும் கடத்தல் பொருள்கள்! என்னதான் தீர்வு?
சென்னையில் தொடர்ந்து கடத்தல் பொருள்கள் பறிமுதல்
தமிழ்நாடுசென்னையில் வந்து குவியும் கடத்தல் பொருள்கள்! என்னதான் தீர்வு?
சென்னையில் தொடர்ந்து கடத்தல் பொருள்கள் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில நாள்களாக ஏராளமான கடத்தல் பொருள்கள் பிடிபட்டு வருகின்றன.
பல்வேறு நாடுகளிலிருந்தும் கடத்தி வரப்படும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள், சுங்கத் துறை அதிகாரிகளின் சோதனைகளின்போது பிடிபட்டு வருகின்றன.
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட உயர்ரக கொக்கின், கஞ்சா மற்றும் தங்கம் ஆகியவற்றை விமான சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கைது செய்தனர்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் (7.12.2024) அன்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையின் போது 14.2 கோடி மதிப்பில் உள்ள 1424 கிராம் கொக்கின் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 7 .12 .2024. அன்று எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மூலம் அடிஸ் அபபாவிலிருந்து சென்னைக்கு வந்த கென்யா நாட்டைச் சேர்ந்த பெண் பயணியை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள் மருத்துவ உதவியுடன் 90 உருண்டைகள் கொண்ட உயர்ரக அடர்த்தியான போதை பொருளை எடுத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கொகைன் மொத்தம் 1,424 கிராம் அளவுக்கு இருந்தது. இதன் மதிப்பு சுமார் 14.2 கோடி ரூபாய் இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் கடந்த 13ஆம் தேதி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பேங்க்காகில் இருந்து சென்னைக்கு வந்த இந்திய ஆண் பயணி ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையில் ஈடுபட்ட போது உணவுப் பொட்டலத்தில் மறைத்து வைத்திருந்த 7.6. கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 76 லட்சம் ரூபாய் இருக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் 15ஆம் தேதி அன்று பயணி ஒருவர் கடத்தி வந்த 1,728 கிராம் எடைக் கொண்ட 24 காரட் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதன் மதிப்பு சுமார் ரூபாய் 1.28 கோடி ரூபாய் இருக்ககூடும் என விமான சுங்கத்துறை அதிகாரிகள் அறிக்கையை வெளியிட்டனர்.
ஏற்கனவே, சென்னை விமான நிலையத்தில் ஒரு சில பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், தீவிர சோதனையின்போது தொடர்ந்து தங்கம் மற்றும் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.