முகப்பு
தமிழ்நாடு

தலா ரூ. 50,000 செலுத்தினால் விடுதலை! 14 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:58 PM
கோப்புப் படம்
பகிர்:

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இந்த மாதத் தொடக்கத்தில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது; அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்தது. இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 14 மீனவர்களுக்கும் சிறைத் தண்டனை வழங்கினர்.

இதனையடுத்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்றால், அபராதம் செலுத்த வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 மீனவர்களும் தலா ரூ. 50,000 செலுத்தினால், உடனடியாக விடுவிக்கப்படுவர்; இல்லையெனில், 6 மாதகால சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.